Home /News /politics /

சிலிண்டர் விலையை குறைக்காதவர்கள் 6 சிலிண்டர்களை சும்மா தருவார்களா? தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி

சிலிண்டர் விலையை குறைக்காதவர்கள் 6 சிலிண்டர்களை சும்மா தருவார்களா? தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி

தங்க தமிழ்ச்செல்வன்

தங்க தமிழ்ச்செல்வன்

சிலிண்டர் விலையை குறைக்க முடியாதவர்கள் 6 சிலிண்டரை இலவசமா எப்படி தருவார்கள் என்று தி.மு.க போடி வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    போடி தொகுதியில் தி.மு.க - அ.தி.மு.க கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. அ.தி.மு.க தரப்பில் போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் களமிறங்குகிறார். இவரை எதிர்த்து தி.மு.க சார்பில் தங்க தமிழ்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தங்க தமிழ்செல்வன் பேசுகையில், "கேஸ் சிலிண்டர் விலையை ஏற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி விலையை குறைக்க சொல்லியும் 8 தடவை போராட்டம் செய்துவிட்டோம். 20 இதில் இருந்து 50 ரூபாய் வரை குறைக்க சொல்லி கேட்டோம். அதையே உங்களால் குறைக்க முடியவில்லை. தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்த பிறகு 6 சிலிண்டரை இலவசமாக தருகிறோம் என்று சொன்னால் மக்கள் எப்படி நம்புவார்கள்.

    குடும்பத்தலைவிக்கு 1,500 ரூபாய் மானியம் கொடுப்பது நாங்க எழுதி வைத்தது லீக் ஆகிடுச்சு. தி.மு.க முந்திவிட்டது என்பது போன்ற பொய்யான தகவலை அ.தி.மு.கவினர் கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நான் பக்குவமாக சொல்வது என்னவென்றால். நீங்க எழுதி வெச்சது உண்மையாக இருந்தால். அந்த பேப்பர நாங்க பார்த்திருந்தா. குடும்பத்தலைவிக்கு 1,500 ரூபாய் அப்படிங்கிறத 2,000 ரூபாய் அப்படின்னு தானே சொல்லியிருப்போம். எதுக்கு நாங்க 1,000 ரூபாய்னு சொல்றோம். எங்களுக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு. நாங்க ஜெயிக்க தானே பார்ப்போம். லீக்கும் கிடையாது எதுவும் கிடையாது.

    தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிந்தனையில் உதித்த மிகப்பெரிய திட்டம். இது எந்த முதலமைச்சரும் செய்யாத சாதனை. கொரோனா காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் மனநிலையை புரிந்துதான் முதலமைச்சர் ஆனதும் தகப்பன் ஸ்தானத்தில் அந்தக் குடும்பங்களுக்கு 1,000 கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது. அதைத்தான் தாய்மார்கள் நம்புகின்றனர். அதான் எங்கள் தேர்தல் அறிக்கையின் டாப் ஹைலைட்’ என்று கூறினார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: ADMK, Bodinayakanur Constituency, Chief Minister Edappadi Palanisamy, DMK, Dmk leader mk stalin, OPS, Thanga Tamilselvan, TN Assembly Election 2021

    அடுத்த செய்தி