நிதிஷ் குமார் தலைமையிலேயே பீகார் தேர்தலை சந்திப்போம் - அமித்ஷா

நிதிஷ் குமார் தலைமையிலேயே பீகார் தேர்தலை சந்திப்போம் - அமித்ஷா
அமித்ஷா
  • News18
  • Last Updated: October 17, 2019, 10:43 AM IST
  • Share this:
பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே விரிசல் விழுந்துள்ள நிலையில், நிதிஷ் குமார் தலைமையிலேயே அங்கு தேர்தலை சந்திக்க உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நியூஸ் 18-க்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளார்.

பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நிதிஷ் குமார் முதல்வராக இருக்கும் நிலையில், மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றதுமே அமைச்சரவையில் இடம் கொடுப்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே மோதல் வெடித்தது.

முத்தலாக் உள்ளிட்ட பல விவகாரங்களில் பாஜகவுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை நிதிஷ் குமாரின் கட்சி எடுத்தது. இதனால், பாஜக சற்று அதிருப்தியிலேயே இருந்தது. அடுத்து நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடலாம் என்று பேச்சு அடிபட்டது.


இந்த நிலையில், நியூஸ் 18 குழுமத்தின் தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஸிக்கு உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அளித்த பேட்டியில், பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலேயே தேர்தலை சந்திப்போம் என்று கூறியுள்ளார்.

கூட்டணி உரசல் பற்றிய கேள்விக்கு, “கூட்டணி என்பது எப்போதும் கருத்து மாறுபாடு கொண்டது. ஆனாலும், அதனை ஆரோக்கியமானதாகவே கருத வேண்டும்” என்று அமித்ஷா கூறினார்.

மேலும், பல விவகாரங்கள் தொடர்பாக அமித்ஷா பேசியுள்ள நேர்காணல் இன்று இரவு நியூஸ் 18 தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக இருக்கிறது.
First published: October 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading