நீங்கள் ஆதரவு தந்தால் கங்குலியை போன்று சிக்ஸர் விளாசுவோம் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

நீங்கள் ஆதரவு தந்தால் கங்குலியை போன்று சிக்ஸர் விளாசுவோம் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

கங்குலி பிரபலமான கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி கொல்கத்தா மண்ணின் மைந்தன் என்பதால் அவரை வைத்து காய் நகர்த்த பா.ஜ.க திட்டமிட்டது.

 • Share this:
  மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு போட்டியாக கங்குலியை களமிறக்க பா.ஜ.க தீவிரமாக முயற்சித்து வந்தது. கங்குலி பிரபலமான கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி கொல்கத்தா மண்ணின் மைந்தன் என்பதால் அவரை வைத்து காய் நகர்த்த பா.ஜ.க திட்டமிட்டது. கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் மார்ச் 7-ம் தேதி நடந்து முடிந்த பொதுக்கூட்டத்தில் கங்குலி பா.ஜ.கவில் இணையவுள்ளதாக பேசப்பட்டது. கங்குலி வந்தால் வரவேற்போம் என உள்ளூர் பாஜகவினர் அப்போது பேசிவந்தனர். கங்குலியோ தொடர்ந்து சைலண்ட் மோடில் இருந்து வருகிறார். இதுகுறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

  இந்நிலையில் மேற்குவங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராஜ்நாத் சிங், மேற்கு வங்க மக்களையும் கங்குலியின் சிக்ஸர்களையும் ஒப்பிட்டு பேசியுள்ளார். பா.ஜ.க மூத்த தலைவரும், பாதுகாப்பு துறை அமைச்சருமான ராஜ்நாத்சிங் மிட்னாப்பூரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், “கங்குலி க்ரீஸை தாண்டி முன்னால் வந்தால் உறுதியாக சிக்ஸர் விளாசுவார். மக்களைவை தேர்தலில் கொடுத்த ஆதரவு போன்று இப்போதும் ஆதரவு தந்தால் நாங்கள் நிச்சயமாக க்ரிஸை தாண்டி சட்டமன்ற தேர்தலில் சிக்ஸர் விளாசுவோம். இங்கு பாஜக ஆட்சி அமையும்” எனக் கூறியுள்ளார்.


  உடனடி செய்தி இணைந்திருங்கள்...
  Published by:Ramprasath H
  First published: