ஓரிரு நாட்களில் அதிமுக உடன் தொகுதி பேச்சுவார்த்தை தொடங்கும்: பாஜக

ஓரிரு நாட்களில் அதிமுக உடன் தொகுதி பேச்சுவார்த்தை தொடங்கும்: பாஜக

பாஜக தேசிய தலைவர் நட்டா, தமிழக தலைவர் எல். முருகன், மேலிட பொறுப்பாளர் சிடி ரவி

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது ஜல்லிக்கட்டு போன்ற தமிழக கலாச்சாரத்திற்கு எதிராக செயல்பட்டதாக சிடி ரவி குற்றம் சாட்டினார்

 • Share this:
  அதிமுக உடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.

  சென்னை பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மேலிட சி.டி.ரவி மற்றும் மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ காயத்ரிதேவி உள்ளிட்டோர் பா.ஜ.கவில் இணைந்தனர்.

  அதன்பின்னர் செய்தியாளர்களை சந்திந்த பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது ஜல்லிக்கட்டு போன்ற தமிழக கலாச்சாரத்திற்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டினார்.

  இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று ஜல்லிக்கட்டு காண்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மட்டுமே தற்போதைக்கு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.

   

  கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஓரிரு தினங்களில் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
  Published by:Yuvaraj V
  First published: