மேற்கு வங்கத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் திடீர் ராஜினாமா; பலம் 75 ஆகக் குறைவு; காரணம் என்ன?

சட்டப்பேரவை

மேற்குவங்க மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

 • Share this:
  நடந்து முடிந்த, மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்., 213 இடங்களில் வெற்றி பெற்றது. முதல்வராக, கடந்த 5-ம் தேதி மம்தா பானர்ஜி பொறுப்பேற்றார். 77 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.., எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது.

  இந்நிலையில் புதிதாக சட்டசபைக்கு தேந்தெடுக்கப்பட்ட பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் ஜெகந்நாத் சர்க்கார், நிதிஷ் பிரமானிக் ஆகிய இருவரும் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் பிமான் பானர்ஜியிடம் கொடுத்தனர்.

  சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் சாந்திப்பூர் தொகுதியில் வென்ரவர் ஜெகன்னாத் சர்க்கார். தின்ஹதா தொகுதியிலிருந்து பாஜக சார்பாகவ் என்றவர் நிதிஷ் பிரமானிக்.

  இவர்கள் ஏற்கனவே நாடாளுமன்ற எம்.பி.க்களாக பதவி வகித்து வருகின்றனர். மாநிலத்தில் பா.ஜ. பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்த்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். எனினும் பா.ஜ. பெரும்பான்மை பெறவில்லை. இதையடுத்து ஒருவர் ஒரு பதவி மட்டுமே வகிக்க முடியும் என்பதால் எம்.பி. பதவியை தக்க வைக்க வேண்டி, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர்.

  சர்க்கார், பிரமானிக் முறையே ரனாகட், கூச்பேகார் எம்.பி.க்களாக உள்ளனர். இந்நிலையில் இவர்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தால்தான் எம்.பி. பதவியைத் தக்க வைக்க முடியும், பாஜகவுக்கு எம்.பி. பதவிதான் முக்கியம், எனவே எம்.எல்.ஏ.பதவிகளை இருவரும் ராஜினாமா செய்யச்சொல்லி மேலிடம் உத்தரவிட்டதால் இவர்கள் ராஜினாமா செய்தனர்.

  இப்போது ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஏற்கெனவே எம்.பி.க்களக இருப்பவர்களை நிற்க வைத்து வென்ற பிறகு எம்.பி. பதவி முக்கியம் என்று ராஜினாமா செய்ய வைத்து, இப்போது இடைத்தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளது பொறுப்பற்ற செயல் என்று திரிணாமூல் வட்டாரங்கள் சாடியுள்ளன.
  Published by:Muthukumar
  First published: