கட்சி தலைமை எடுக்கும் நடவடிக்கைக்கு நான் கட்டுப்படுவேன் - பாஜக துணை தலைவர் பி.டி. அரசகுமார்!

கட்சி தலைமை எடுக்கும் நடவடிக்கைக்கு நான் கட்டுப்படுவேன் - பாஜக துணை தலைவர் பி.டி. அரசகுமார்!
  • News18
  • Last Updated: December 3, 2019, 3:55 PM IST
  • Share this:
திமுக தலைவர் ஸ்டாலினை அடுத்த முதல்வர் என கூறிய பாஜக துணை தலைவர் பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய தலைமைக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கும் நிலையில் தனக்கு திமுகவில் சேர வேண்டும் என்ற சிந்தையே இல்லை , கட்சி என்ன நடவடிக்கை எடுத்தாலும் சரி என அவர் நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

செய்தியாளர்: உங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக தலைமைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதே அது குறித்து உங்களின் கருத்து?

அரசகுமார்: ஒரு திருமண விழாவில் ஒரு கட்சியின் தலைவரை பற்றி பேசிய சாதாரண நிகழ்வுதான் இது. எந்த விதமான உள்ளோக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் நான் பேசவில்லை.


மாநிலத்தில் பாஜகவிற்கு தலைவர் இல்லாததால் இந்த விசயம் குறித்து அமைப்பு பொது செயலாளர் தேசிக விநாயகத்திடம் கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளேன்.

தேசிய பொது செயலாளர் முரளிதர ராவிற்கு தொலைபேசி மூலம் விளக்கமளித்துவிட்டேன். இனி கட்சி என்ன நடவடிக்கை எடுத்தாலும் சரி

செய்தியாளர்: நீங்கள் ஒரு கட்சியின் துணை தலைவர். ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறீர்கள். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக வேண்டும் என்ற தொணியில் பேசுகிறீர்கள்?அரசகுமார்: ஸ்டாலின் அடுத்த முதல்வர் ஆவார் என்று நான் எந்த இடத்திலும் சொல்லவில்லையே. அங்கிருந்தவர்கள் வருங்கால முதல்வர் என ஸ்டாலினை கூறினார். நான் காலம் வரும் காத்திருங்கள், காரியங்கள் தானாய் நடக்கும், ஜனநாயக ரீதியாக வெற்றி பெற அவர் நினைக்கிறார், ஜனநாயகரீதியான வெற்றி கிட்டட்டும் என்றுதான் சொன்னேன்

செய்தியாளர்: ஏற்கனவே திராவிட சிந்தாந்தம் கொண்ட கட்சியில் இருந்து பாஜக வந்தீர்கள். எனவே இனிவரும் காலங்களில் திமுகவில் இணையும் எண்ணம் இருக்கிறதா?

அரசகுமார்: அந்த மாதிரி நான் சிந்திக்கவே இல்லை. பிரதமர் நரேந்திரமோடியின் பணிகள் பிடித்துதான் பாஜகவிற்கு வந்தேன்

செய்தியாளர்: பிரதமர் மோடியை களவாணி என்று விமர்சித்த ஸ்டாலினை அடுத்த முதல்வர் என்ற தொனியில் கூறியுள்ளீர்கள்?

அரசகுமார்: அதற்கு நானே பலமுறை கண்டனம் தெரிவித்திருக்கிறேன். அது அரசியல் சார்ந்த நிகழ்வு. இது திருமணவிழாவில் எல்லோரும் பேசும் போது புகழ்ந்து பேச வேண்டிய மரபுதானே ஒழிய எந்த எதிரிபார்ப்பும் இல்லை

Also see...


First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading