Home » News » Politics » BJP PROVOKING HATRED IN BENGAL BY COMMUNAL SPEECHES TMC MUT

தங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களை பாஜக மிரட்டுகிறது: திரிணாமுல் குற்றச்சாட்டு

திரிணாமுல் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஃபிர்ஹாத் ஹகீம் வியாழனன்று கூறுகையில், மேற்கு வங்கத்தில் பாஜக தனது மதவெறி பேச்சுகளினால் இரு சமுதாயத்தினரிடையே வெறுப்புணர்வைத் தூண்டி விடுகின்றனர் என்று கூறினார். 

தங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களை பாஜக மிரட்டுகிறது: திரிணாமுல் குற்றச்சாட்டு
மாதிரிப் படம்
  • Share this:
திரிணாமுல் கட்சியிலிருந்து பாஜக-வுக்குத் தாவிய சுவேந்து அதிகாரியின் பேரணியில் சர்ச்சைக்குரிய வெறுப்புக் கோஷங்களை எழுப்பிய பாஜக இளையோர் பிரிவு தலைவர் சுரேஷ் சாஹு உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திரிணாமுல் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஃபிர்ஹாத் ஹகீம் வியாழனன்று கூறுகையில், மேற்கு வங்கத்தில் பாஜக தனது மதவெறி பேச்சுகளினால் இரு சமுதாயத்தினரிடையே வெறுப்புணர்வைத் தூண்டி விடுகின்றனர் என்று கூறினார்.
மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இத்தகைய போக்கை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று திரிணாமுல் கோரிக்கை வைத்துள்ளது.


“எங்களுக்கு தேவையானதெல்லாம் நியாயமான, அமைதியான தேர்தலே. கோலி மாரோ போன்ற வன்முறைப்பேச்சுக்கள் மூலம் சமூகத்தை பாஜக பிளவு படுத்தி வருகிறது. அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களை பாஜக பயமுறுத்துகிறது.

வங்கதேசத்தவர்கள், ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாக்காளர் பட்டியலில் 10% இடம்பெற்றிருப்பதாக பாஜக கூறுகிறது, தேர்தல் ஆணையமே, இது உன் மீதான குற்றச்சாட்டு, ஏனெனில் தேர்தல் ஆணையம் தான் வாக்காளர் பட்டியலைத் தயாரித்தது” என்றார் ஹகீம்.

மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் பாஜக தொண்டர்கள் 3 பேர் வெறுப்புணர்வைத் தூண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் போலீசார் தாமாகவே முன் வந்து அவர்களைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
First published: January 21, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories