• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • ‘பாஜக அனுப்பும் ஆட்கள் எங்கள் கலாச்சாரத்தை அழிக்கின்றனர்’ - மம்தா பானர்ஜி தாக்கு

‘பாஜக அனுப்பும் ஆட்கள் எங்கள் கலாச்சாரத்தை அழிக்கின்றனர்’ - மம்தா பானர்ஜி தாக்கு

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

நான் பிரதமர் நாற்காலியை மிகவும் மதிக்கிறேன். அந்த நாற்காலியின் மதிப்பு எனக்கு தெரியாமல் இல்லை. ஆனால் நான் பிரதமர் மோடியை போன்ற ஒரு பொய் சொல்லும் நபரை பார்த்தது இல்லை.

  • Share this:
    மேற்கு வங்கத்துக்கு பா.ஜ.கவினர் குண்டர்களை அனுப்புகிறார்கள் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டியுள்ளார்.

    மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மம்தா பானர்ஜி திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இரண்டு கட்சிகளும் தற்போது வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்க முதல்வரும் , திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி பிஷ்ணுபூர் பகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசியவர், “நான் பிரதமர் நாற்காலியை மிகவும் மதிக்கிறேன். அந்த நாற்காலியின் மதிப்பு எனக்கு தெரியாமல் இல்லை. ஆனால் நான் பிரதமர் மோடியை போன்ற ஒரு பொய் சொல்லும் நபரை பார்த்தது இல்லை. அவர் பொய்யை மட்டுமே பேசி வருகிறார்.

    பா.ஜ.கவின் சித்தரவைதையை தாங்க முடியாமல் உத்தரபிரதேசத்தில் பல ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர். விவசாயிகள் ஒரு வருடத்துக்கு மேலாக சாலையில் அமர்ந்துள்ளனர். விவசாயிகள் இத்தகைய துயரத்துக்கு ஆளாக மோடி, அதானி, அமித் ஷா ஆகிய மூவரும் தான் காரணம். அதானி பணத்தையும் தயாரிப்புகளையும் கொள்ளையடிப்பார். மோடி, அமித் ஷா, அதானி ஆகிய மூவர் மட்டுமே சாப்பிடுவார்கள். மீதமுள்ள மக்களால் கண்ணீர் மட்டுமே வடிக்க முடியும்.

    உத்தரப்பிரதேசத்தில் இருந்து, மேற்கு வங்கத்திற்கு பா.ஜ.க தொடர்ந்து ஆட்களை அனுப்பி வருகிறது, அத்தகைய வெளியாட்கள் எங்கள் கலாச்சாரத்தை அழிக்கின்றனர்” என குற்றம் சாட்டினார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: