• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • அமமுக குள்ளநரிகளின் கூட்டம்; அதிமுக சிங்கங்கள் கூட்டம் - சசிகலா இணைப்புக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

அமமுக குள்ளநரிகளின் கூட்டம்; அதிமுக சிங்கங்கள் கூட்டம் - சசிகலா இணைப்புக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

அ.ம.மு.க குள்ளநரிகளின் கூட்டம், அ.தி.மு.க, சிங்கங்களின் கூட்டம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

  • Share this:
    சசிகலா அ.தி.மு.க வில் இணைவது சாத்தியமில்லை என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளுடன் தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக அ.தி.மு.க - பா.ம.கவுக்கு இடையேயான தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. பா.ம.க-வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க - பா.ஜ.க இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க-வை கொண்டு வருவது பற்றி பா.ஜ.க தரப்பு பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதாகவும் உங்களுக்கு மட்டும் பேசுங்கள் அ.ம.மு.கவை பற்றி பேச வேண்டாம் என்று கூறியதாகவும் தெரிகிறது.

    அ.ம.மு.க-வை கூட்டணிக்குள் கொண்டுவந்தால் தேவர் சமுதாய வாக்குகள் சிதறாமல் அப்படியே கிடைக்கும் என்பது பா.ஜ.கவின் கணக்கு என்று கூறப்படுகிறது. அ.ம.மு.க-வை கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து பா.ஜ.க - அ.தி.மு.க இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதால்தான் கூட்டணி இன்னும் உறுதியாகாமல் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. இதனை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முற்றிலும் மறுத்துள்ளார்.

    சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘அ.தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றிப்பெறும். எங்களை யாரும் நிர்பந்தப்படுத்த முடியாது. எங்கள் கட்சியின் உள்விவகாரங்களில் பா.ஜ.க என்றும் தலையிட்டது கிடையாது. பா.ஜ.க எங்களுக்கு நிர்பந்தம் அளிப்பது போல் ஒரு வதந்தியை கிளப்புகிறார்கள். அ.ம.மு.க-வும் சசிகலாவும் அ.தி.மு.க-வில் இணைவதற்கான எந்த சாத்தியமும் இல்லை. இதுதான் உறுதியான நிலை. குள்ளநரிகளின் கூட்டமாக இருக்கின்ற அ.ம.மு.க எங்கே சிங்கங்களின் கூட்டமான அ.தி.மு.க எங்கே. சி.டி.ரவி பேசியது அவரின் யோசனையாக இருக்கலாம். அந்த யோசனை நாங்கள் நிராகரித்து விட்டோம்” எனக் கூறினார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: