பாஜகவில் ரவுடிகள் இணைந்துள்ளனர் என ஸ்டாலின் கூறுவது எப்படி இருக்கிறது தெரியுமா? அண்ணாமலை விமர்சனம்

பாஜகவில் ரவுடிகள் இணைந்துள்ளனர் என ஸ்டாலின் கூறுவது எப்படி இருக்கிறது தெரியுமா? அண்ணாமலை விமர்சனம்

தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை

. அராஜகமும் லஞ்சமும் யார் ஆட்சியில் அதிகமாக இருந்தது என தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள்.

  • Share this:
    பாஜகவில் ரவுடிகள் இணைந்துள்ளனர் என்ற மு.க.ஸ்டாலினின் கருத்தை பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பாஜகவில் ரவுடிகள் இணைந்துள்ளனர் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது, சட்டியை பார்த்து அடுப்புக்கரி நீ கருப்பு என்று கூறுவதுபோல் உள்ளது. அராஜகமும் லஞ்சமும் யார் ஆட்சியில் அதிகமாக இருந்தது என தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள் ஸ்டாலின் இது போல் பேசுவது ஏற்புடையது அல்ல.

    பெட்ரோல் விலை நிச்சயமாகக் குறையும் மக்கள் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா சைக்கிளில் பயணம் செய்கிறார். 2009ஆம் ஆண்டு பெட்ரோலியத் துறையில் ஊழல் செய்தவர் அவர்தான். ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு என்னை குழாய் அமைப்பதற்கு 150 மில்லியன் டாலர் லஞ்சம் பெற்று அதன் மூலம் லண்டன் நாட்டில் பெண்ட் ஹவுஸ் வாங்கியவர் ராபர்ட் வதேரா.

    திருக்குறளை கண்டு பிரம்மிப்பாக உள்ளது என ராகுல்காந்தி இப்போது பேசுகிறார். ஜல்லிக்கட்டுக்கு தடை விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள் என காங்கிரஸ் அரசு கொண்டு வந்த போது ராகுல் காந்தி திருக்குறளை படிக்கவில்லையா? ஏறுதழுவுதல் உழவர்களுக்கு திருவள்ளுவர் முக்கியத்துவம் கொடுத்துள்ளதை ராகுல்காந்தி அறியவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்கள் செத்துப் போய்விட்டன. அவைகளை மீட்டெடுக்கும் நோக்கத்தில்தான் தனியாருக்கு அதிக பங்குகள் தரப்படுகிறது என்றார்.
    Published by:Vijay R
    First published: