என்னை கொலை செய்து ஆட்சியை பிடிக்க திட்டமா? - பா.ஜ.கவை வெளுத்து வாங்கும் மம்தா

என்னை கொலை செய்து ஆட்சியை பிடிக்க திட்டமா? - பா.ஜ.கவை வெளுத்து வாங்கும் மம்தா

மம்தா பானர்ஜி

மம்தாவை கட்டுப்படுத்த முடியாது என அமித் ஷாவுக்கு தெரியும். அதனால்தான் உள்துறை அமைச்சர் கொல்கத்தாவில் அமர்ந்து சதிசெய்கிறார்.

  • Share this:
மேற்கு வங்க அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்துக்கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைப்பதில் முனைப்பு காட்டிவருகிறது. பாஜக மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என நோக்கில் பணி செய்து வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்முகாமான பாஜகவுக்கு சென்றிருப்பது பாஜகவின் அரசியல் சூழ்ச்சி என விமர்சிக்கின்றனர் திரிணாமூல் கட்சியினர்.

இந்நிலையில்தான் நந்திகிராம் தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மம்தாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. காருக்கு திரும்பும்போது அடையாளம் தெரியாத நபர்கள் என்னை தள்ளியதால் என்னுடைய காலில் காயம் ஏற்பட்டது என மம்தா கூறியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய மம்தா தற்போது சக்கர நாற்காலியில் பிரசாரம் செய்து வருகிறார்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் அமர்ந்தப்படி பன்குரா பகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய மம்தா, ‘மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் உங்கள் எல்லா உரிமைகளையும் நீங்கள் இழப்பீர்கள். எல்லா வங்கிகளும் மூடப்படும். மத்திய அமைச்சர்கள் பலர் தற்போது தேர்தல் காரணமாக மேற்குவங்கத்தில் முகாமிட்டுள்ளனர். கொரோனா தொற்று, சூறாவளி ஏற்பட்டபோது ஒருவரை காணோம் இப்போது எல்லாரும் வருகிறார்கள் வெட்கமாக இல்லையா? கொரோனா தொற்றின்போது பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்துக்காக ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.

மம்தாவை கட்டுப்படுத்த முடியாது என அமித் ஷாவுக்கு தெரியும். அதனால்தான் உள்துறை அமைச்சர் கொல்கத்தாவில் அமர்ந்து சதிசெய்கிறார். உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா நாட்டை வழி நடத்துவதை விட்டுவிட்டு கொல்கத்தாவில் அமர்ந்துக்கொண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்களை துன்புறுத்தும் சதித்திட்டத்தை மேற்கொண்டு இருக்கிறார். அவர்களுக்கு என்ன வேண்டும். என்ன கொலை செய்ய விரும்புகிறார்கள். என்னை கொன்றுவிட்டு தேர்தலில் ஜெயித்து ஆட்சியை பிடிக்கலாம் என நினைக்கின்றனரா?

தேர்தல் ஆணையத்தை அமித் ஷா வழி நடத்துகிறாரா என்ன? தேர்தல் ஆணையத்துக்கு அமித் ஷா வழிக்காட்டுகிறார். அமித்ஷா தேர்தல் ஆணையத்தின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுகிறார்” என மம்தா கூறினார்.


உடனடி செய்தி இணைந்திருங்கள்...
Published by:Ramprasath H
First published: