பாஜக 41-ம் ஆண்டு தொடக்க விழா : பாரத மாதா படத்துக்கு ஆரத்தி எடுத்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் 41-ஆம் ஆண்டு தொடக்க விழாவை மயிலாடுதுறையில் அக்கட்சியினர் நகர பாஜக அலுவலகத்தில் இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.

 • Share this:
  மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியின் 41-ஆம் ஆண்டு தொடக்க விழாவை அக்கட்சியினர் நகர பாஜக அலுவலகத்தில் பாரத மாதா திருவுருப்படத்துக்கு ஆரத்தி எடுத்து இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.

  பாஜக நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன், விஸ்வஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளில் பாஜகவின் வளர்ச்சி குறித்து சிறப்புரை ஆற்றினர்.

  இந்த விழாவில், பாரத மாதா திருவுருவப்படம், டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாய ஆகியோரின் மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்ட உருவப்படங்களுக்கு பாஜக மகளிரணி பொறுப்பாளர்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, பாஜக கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் திரளான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
  Published by:Ram Sankar
  First published: