• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • ஒருமணி நேரத்துக்கு மேல் முதல்வருக்காகக் கூட நான் பிரச்சாரம் செய்ய மாட்டேன், என்ன விளையாடுகிறீர்களா? - திரிணாமூல் எம்.பி.யின் கோபத்தை வைரலாக்கிய பாஜக

ஒருமணி நேரத்துக்கு மேல் முதல்வருக்காகக் கூட நான் பிரச்சாரம் செய்ய மாட்டேன், என்ன விளையாடுகிறீர்களா? - திரிணாமூல் எம்.பி.யின் கோபத்தை வைரலாக்கிய பாஜக

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, நஸ்ரத் ஜகான் அங்கலாய்த்துக் கொண்ட வீடியோ ஒன்றை மேற்கு வங்க பாஜக வெளியிட்டு வைரலாக்கியுள்ளது.

  • Share this:
    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, நஸ்ரத் ஜகான் அங்கலாய்த்துக் கொண்ட வீடியோ ஒன்றை மேற்கு வங்க பாஜக வெளியிட்டு வைரலாக்கியுள்ளது.

    மேற்கு வங்கத் தேர்தல் 27ம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவிடையே ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இரைக்கும் படுமலிவான அரசியல் தலைத்தூக்கியுள்ளது.

    அதன் ஒரு அங்கமாக, திரிணாமுல் எம்.பி. நஸ்ரஜ் ஜகான், ஒரு கூட்டத்தில் அங்கலாய்த்துக் கொண்ட வீடியோவை பாஜக சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறது. சமூக ஊடகங்களை எப்படி முடுக்கி விடுவது வைரலாக்குவது என்ற வித்தை பாஜகவுக்குக் கைவந்த கலை.

    அதில் இந்த முறை சிக்கியவர் திரிணாமுல் எம்.பி.நஸ்ரஜ் ஜகான் ஆவார். அவர் அந்த வீடியோவில் வேட்பாளரிடம் “நான் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக பேரணியிலும் கூட்டத்திலும் இருக்கிறேன். முதல்வராகவே இருந்தாலும் நான் இவ்வளவு நேரம் இருக்க மாட்டேன், என்ன விளையாடுகிறீர்களா?” என்று கேட்டுள்ளார்.

    இந்த வீடியோவை வெளியிட்ட பாஜக, ‘நான் ஒருமணி நேரத்துக்கு மேல் பிரச்சாரம் செய்ய மாட்டேன், முதல்வராகவே இருந்தாலும் நான் செய்ய மாட்டேன்’ என்ற பேச்சு அடங்கிய வீடியோவை வெளியிட்டு மம்தா நந்திகிராமில் தோற்கிறார், அதாவது MamataLosingNandigram என்று ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ உடனேயே வைரலானது. இது திரிணாமூல் கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது தொடர்பாக யாரும் எந்தக் கருத்தும் கூறவில்லை.

    மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு 27ம் தேதி நடந்த போது 79.79% வாக்குகள் பதிவாகின. முதல் கட்ட வாக்குப் பதிவில் 21 பெண் வேட்பாளர்கள் உட்பட 191 வேட்பாளர்களின் தலை விதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கச் சட்டப்பேரவைக்கான அடுத்த 7 கட்ட வாக்குப்பதிவுகள் பல்வேறு தேதிகளில் நடைபெற ஏப்ரல் 29-ல் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. மே 2ம் தேதி வாக்கு எண்ணப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: