மாநில தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடையும்: நாட்டுக்கு ஒரு புதிய வழி பிறக்கும்- சரத் பவார்

மாநில தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடையும்: நாட்டுக்கு ஒரு புதிய வழி பிறக்கும்- சரத் பவார்

சரத் பவார்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பாஜக படுதோல்வி அடைந்து, மற்ற கட்சிகள் வெற்றி பெற்று நாட்டுக்கு ஒரு புதிய வழியைக் காட்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பாஜக படுதோல்வி அடைந்து, மற்ற கட்சிகள் வெற்றி பெற்று நாட்டுக்கு ஒரு புதிய வழியைக் காட்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘சட்டசபைத் தேர்தல்களைச் சந்திக்கும் அசாம் மாநிலத்தில் மட்டுமே பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் மற்றபடி மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில தேர்தலில் பாஜக படு தோல்வியடையும்.

இந்த மாநில தேர்தல் முடிவுகள் மூலம் நாட்டுக்கு புதிய வழிபிறக்கும். அசாமில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் பாஜக பரவாயில்லை. மற்ற மாநிலங்களில் மற்ற கட்சிகளே வெற்றி பெறும், நிச்சயம் இந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் நாட்டுக்கு ஒரு புதிய வழியைக் காட்டும்.

மேற்கு வங்கத்தில் பாஜக தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறது. மம்தாவைத் தாக்க முயற்சி செய்கிறது. மம்தா மாநில மக்களின் நலன்களுக்காக போராடுகிறார்.

இது பெங்காலி கவுரவம் மற்றும் சுய மரியாதையைக் காப்பாற்ற வேண்டிய தேர்தலாகும். மம்தா தலைமையில் திரிணாமுல் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.

கேரளாவில் இடதுசாரிக் கட்சிகள் , என்சிபி கூட்டணி தெளிவான பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும். அதே போல் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையும்.’ என்றார் சரத் பவார்.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது, மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக மாநில சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

இதற்கிடையே சக்கர நாற்காலியில் அமர்ந்து திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘மக்களுக்கு எங்களுக்கு வாக்களித்தால், அவர்களுக்கு ஜனநாயகம் மீண்டும் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். வங்கத்துக்கு எதிரான அனைத்து சதிகளும் முறியடிக்கப்படும். உடைந்த காலுடன் சக்கர நாற்காலியில் நான் பிரச்சாரம் செய்வேன் என்பதற்கு உறுதியளிக்கிறேன். ஆட்டம் தொடங்குகிறது. காயம்பட்ட புலிதான் மிகவும் ஆபத்தான் மிருகம்’ என்று தெரிவித்தார்.

முன்னதாக ட்விட்டர் பக்கத்தில் மம்தா, வேதனையைக் காட்டிலும் மக்களின் வலியை அதிகமாக உணர்வதாகவும், தொடர்ந்து தைரியமாக போராடுவோமே தவிர கோழைகளுக்கு முன் மண்டியிடமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
Published by:Muthukumar
First published: