• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் அர்ஜுன மூர்த்தி ஆலோசனை

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் அர்ஜுன மூர்த்தி ஆலோசனை

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார்.

  • Share this:
    அரசியலுக்கு வருவதாக கடந்த 2017ல் கூறிய ரஜினி, தற்போது தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். வரும் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ளார்.

    இந்நிலையில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அர்ஜுன மூர்த்தி மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும் ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் ஆகிய மூன்று பேரும் இன்று கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட 8 மாவட்ட செயலாளர்களும் உடன் இருந்தனர்.

    இன்று காலை 11.30 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பூத் கமிட்டி அமைப்பது மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    மேலும் படிக்க...லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30க்குள் காலி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: