ரஜினியின் பாதம் தொட்டு  நான் தனி கட்சி துவங்குகிறேன் - அர்ஜுன மூர்த்தி

ரஜினியின் பாதம் தொட்டு  நான் தனி கட்சி துவங்குகிறேன் - அர்ஜுன மூர்த்தி

அர்ஜூன மூர்த்தி

ரஜினியால் தமிழகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட அர்ஜுன மூர்த்தி புதிய கட்சி துவங்கினார். புதிய கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

  • Share this:
நடிகர் ரஜினியால் தமிழகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட அர்ஜுன மூர்த்தி புதிய கட்சி துவங்கினார். புதிய கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை மூலம் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார். தன்னுடைய கட்சிக்கு அர்ஜூன மூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என பெயரிட்டுள்ளார்.

கட்சியை தொடங்கிய பின்னர் பேசிய அர்ஜூன மூர்த்தி, ``எங்கள் கட்சிக்கு ரஜினிகாந்த் மானசீக தலைவராக இருப்பார். ஆனால் நிர்வாகத்திற்கு என்று தனியாக ஒரு தலைவர் நியமிக்கப்படுவார். வயசு ஆச்சுனா எல்லாரும் காசிக்கு போவாங்க. ஆனால், நான் கட்சிக்கு வந்துவிட்டேன். நான் பாஜகவில் இருந்து இருந்தால் பல பதவிகள் கிடைத்து இருக்கும். ஆனால் நான் ஆண்டவனின் கட்டளையை  மீறவில்லை. ரஜினியின் பாதம் தொட்டு  நான் தனி கட்சி துவங்குகிறேன். பழைய கட்சிகள் துருப்பிடித்தவிட்டது. இனிமேல் அவைகள் நமக்கு வேண்டாம். என் கட்சியின் பெயர்  `இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’. இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் மானசீக தலைவராக ரஜினிகாந்த் இருக்கலாம்” என அர்ஜுனா மூர்த்தி மேடையில் பேசினார்

தொடர்ந்து பேசிய அவர், ``நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
5 திட்டங்களை முதலில் அமல்படுத்த இருக்கிறோம். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு  பஸ் பாஸூடன் பெட்ரோல் கார்ட் வழங்கப்படும். அதன் மூலம் இலவச பெட்ரோல் வழங்கப்படும். மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 4 துணை முதல்வர் இருப்பார்கள். 10ம் வகுப்புக்கு பிறகு படிப்பை கைவிட்ட மாணவர்களை மீண்டும் இலவசமாக தொழிற்கல்வி பயில பல்கலைக்கழகம் அமைப்போம். கிராமங்கள் தோறும் கிராம வளர்ச்சி அலுவலரை நியமித்து வர்த்தகத்தை பெருக்குவோம்” என கூறினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் அர்ஜுன மூர்த்தி, `` எங்களது கட்சியின் நிர்வாகிகள் பட்டியல் வரும் 1-ம் தேதி  அறிவிக்கப்படும்.
தேர்தல் முன்கூட்டியே  வரும் என்று யூகித்ததனால்  ஏற்கனவே ஒரு தொகுதிக்கு நான்கு வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளோம். இதில் திறமையானவர்கள் மற்றும் கட்சி கொள்கைக்கு ஏற்ப செயல்படுபவர்களில் ஒருவரை  வேட்பாளராக  அறிவிக்க உள்ளோம். இன்று தான் கட்சி தொடங்கியிருப்பதால், எங்களுடைய நிர்வாகக் குழுவுடன் பேசி கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். ரஜினிகாந்த் தனது ரசிகர்கள்  எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்று  வெளிப்படையாக அறிவித்துள்ளார். எனவே, எனது செயல் திட்டம் மற்றும்  அணுகுமுறையும் மாற்றத்திற்கான ஒரு ஆளாக என்னை  நம்புவதாக இருந்தால் ரஜினி ரசிகர்கள் என்னை நம்பி வரலாம்” என்று தெரிவித்தார்.
Published by:Ram Sankar
First published: