என்ன பயந்துட்டியா குமாரு! - பாஜக அண்ணாமலை வைரல் ட்வீட்

என்ன பயந்துட்டியா குமாரு! - பாஜக அண்ணாமலை வைரல் ட்வீட்

அண்ணாமலை

திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பலர் அண்ணாமலை மனுவை ஏற்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தன் மீதுள்ள வழக்குகளை மறைத்துள்ளார்; எனவே மனுவை ஏற்கக்கூடாது என்றனர்.

 • Share this:
  தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தற்போது நடந்து வருகிறது.

  அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதை மறைத்திருப்பதாக புகார் எழுந்ததால் அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது. திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பலர் அண்ணாமலை மனுவை ஏற்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  தன் மீதுள்ள வழக்குகளை மறைத்துள்ளார்; எனவே மனுவை ஏற்கக்கூடாது என திமுக, சுயேச்சை வேட்பாளர்கள் வலியுறுத்தினர். பரிசீலனைக்கு பின்னர் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை ‘என்ன பயந்துட்டியா குமாரு! அந்த ஆண்டவனே நம்ம பக்கம் ’ என ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது.
  Published by:Ramprasath H
  First published: