‘எங்க வீட்டுக்கு நீங்க வருவீங்களா..! கேள்வி கேட்ட சிறுமி ’ - கிராமத்தையே ஆச்சர்யப்படுத்திய அண்ணாமலை

அண்ணாமலை

தேர்தல் பிரச்சாரத்தில் சிறுமி கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிறுமியின் வீட்டில் உணவருந்தி இரவு முழுவதும் அவர்களது வீட்டில் தங்கியிருந்த பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை.

 • Share this:
  கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி கட்சியான பா.ஜ.க வேட்பாளர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து முனைப்புடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

  அரவக்குறிச்சி தொகுதி அதிக கிராமங்கள் நிறைந்த தொகுதி. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேட்டமங்கலம் ஊராட்சியில் உள்ள சேமங்கி, செல்வநகர் அருந்ததியர் காலனியில் வாக்கு சேகரிக்கச் சென்ற போது அந்த கிராமத்தில் இருந்த சிறுமி ஒருவர் எங்கள் வீட்டிற்கு எல்லாம் நீங்கள் வருவீர்களா என்று கேட்டுள்ளார். நான் வீட்டுக்கு கண்டிப்பா வருகிறேன், ஒரு நாள் தங்கி செல்கிறேன் என்று கூறிச் சென்றுள்ளார்.

  இந்நிலையில் நேற்று இரவு தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அண்ணாமலை வேட்டமங்கலம் காலனியில் உள்ள சிறுமியின் வீடு பாலுசாமி என்பவரது வீட்டிற்கு சென்று தங்கினார். இரவு உணவு அவர்களுடன் சாப்பிட்டு விட்டு அங்கேயே உறங்கினார். காலை எழுந்த அவர் அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் கலந்துரையாடியவர், அப்பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்தார். சிறுமியின் வீட்டில் அண்ணாமலை தங்கிய நிகழ்வு அப்பகுதி கிராம மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் : கார்த்திகேயன்
  Published by:Ramprasath H
  First published: