இழுபறிக்குப் பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட அண்ணாமலை, ஆர்.பி.உதயகுமாரின் வேட்புமனுக்கள்!

இழுபறிக்குப் பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட அண்ணாமலை, ஆர்.பி.உதயகுமாரின் வேட்புமனுக்கள்!

அண்ணாமலை

உதயநிதி ஸ்டாலின், டிடிவி தினகரன், சீமான், குஷ்பு மற்றும் எல்.முருகன் ஆகியோரின் மனுக்களும் ஏற்கப்பட்டன.

 • Share this:
  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் போன்றோரின், வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மனு இழுபறிக்குப் பின் ஏற்கப்பட்டது.

  தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, 234 தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களையும், பரிசீலிக்கும் பணி தொடங்கியது. அதில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி, போடி தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலின், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல் ஹாசன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

  சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சைதை துரைசாமி, சொத்து விவரங்களை முறையாக தெரிவிக்கவில்லை என புகார் எழுந்ததை அடுத்து அவரது வேட்பு மனு முதலில் நிறுத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் மனித நேய அறக்கட்டளை மூலமாக எந்த வருவாயும் சைதை துரைசாமி பெறவில்லை என அவரது தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் ஆதாரத்துடன் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சைதை துரைசாமியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.

  உதயநிதி ஸ்டாலின், டிடிவி தினகரன், சீமான், குஷ்பு மற்றும் எல்.முருகன் ஆகியோரின் மனுக்களும் ஏற்கப்பட்டன.

  கெங்கவல்லி அதிமுக வேட்பாளர் நல்லதம்பி தன் மீதான நில அபகரிப்பு வழக்கை மறைத்ததாக எழுந்த புகாரின் பேரில் அவரது மனு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அப்பாவு மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் இன்பதுரை இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டியதால் மனுக்களை பரிசீலனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் தேர்தல் பார்வையாளர் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்ததன் பின், இருவரின் மனுக்களும் ஏற்கப்பட்டன.

  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனு சிறிது நேர இழுபறிக்கு பின்பு ஏற்கப்பட்டது.பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை தன் மீதான வழக்குகள் தொடர்பான தகவல்களை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை என பிற வேட்பாளர்கள் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து அவரது வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர் சிறிது நேர இழுபறிக்கு பின்னர் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
  Published by:Ram Sankar
  First published: