விவசாயிகளுக்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை அறிவித்த அன்னா ஹசாரே!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமது நகரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்க உள்ளதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். அவர் தனது ஆதரவாளர்களும் அந்தந்த இடங்களில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  மத்திய அரசு அறிவித்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடுமையாக போராட்டக்களை மேற்கொண்டு வந்தனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்தினர். பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. இதில் விவசாயிகள் மற்றும் காவல்துறையினர் பலர் கடுமையாக காயமடைந்தனர். இந்த போராட்டங்களுக்கு எதிர்கட்சி தலைவர்கள் உட்பட பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தற்போது சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமது நகரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்க உள்ளதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். அவர் தனது ஆதரவாளர்களும் அந்தந்த இடங்களில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  அன்னா ஹசாரே இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ``விவசாயிகளின் முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த நான்கு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறேன். எனினும், விவசாயிகளின் பிரச்னையில் அரசாங்கம் சரியான முடிவை எடுக்கவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்க மறுக்கிறது. மத்திய அரசிற்கு எங்களது கோரிக்கைகளை நாங்கள் தொடர்ச்சியாக வைத்து வருகிறோம்.

  பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய வேளாந்துறை அமைச்சருக்கும் கடந்த மூன்று மாதங்களில் ஐந்து முறை கடிதங்கள் எழுதியுள்ளேன். அரசாங்க அதிகாரிகள் விவசாயிகளுடன் வேளாண் சட்டம் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்து வருகின்றனர். ஆனால், இதுவரை சரியான முடிவை எடுக்கவில்லை. எனவே, நாளை முதல் காலவரையற்ற உண்னாவிரதப் போராட்டத்தை தொடரப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Ram Sankar
  First published: