அண்ணா திராவிடர் கழகம் தனித்துப்போட்டி - சசிகலா தம்பி திவாகரன் அறிவிப்பு

திவாகரன்

ஜனநாயக தேர்தல் திருவிழாவில் அண்ணா திராவிடர் கழகம் பங்கேற்கும் என சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்துள்ளார். தங்களுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப்போட்டியிடுவதாக கூறினார். அதுமட்டுமின்றி 18 வேட்பாளர்களை கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்டுகிறார் திவாகரன்.

 • Share this:
  தமிழக சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிடர் கழகம் தனித்து போட்டியிடும் என்று திவகாரன் தெரிவித்துள்ளார்.

  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளரும் சசிகலாவின் சகோதரருமான திவாகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் ஜனநாயக தேர்தல் திருவிழாவில் அண்ணா திராவிடர் கழகம் பங்கேற்கும். தங்களுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப்போட்டியிடுவதாக கூறினார். அதுமட்டுமின்றி 18 வேட்பாளர்களை கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்டுகிறார் திவாகரன்.

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். அப்போது தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைந்து துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார். இதனையடுத்து டி.டி.வி.தினகரன், சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து வெளியேறினர். கழகத்தை காப்போம் என்ற முழக்கத்துடன் இருவரும் ஒன்றிணைந்தனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அண்ணா திராவிடர் கழகம் உதயமானது.

  டிடிவி.தினகரன் அ.தி.மு.கவினரை தொடர்ந்து விமர்சித்து வந்தார். திவாகரன் அ.தி.மு.க ஆதரவு மனநிலையில்தான் செயல்பட்டு வந்தார். அதிமுகவுக்கு ஆதரவாக பேசிய நிலையில் தனித்து போட்டி என்று அறிவித்து முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் திவாகரன்.

  “ஜனநாயக தேர்தல் திருவிழாவில் அண்ணா திராவிடர் கழகம் பங்கேற்கும். தங்களுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் முகம் சுளிக்கும் அளவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. கூட்டு வியாபாரம் போல் உள்ளது. அண்ணா திராவிடர் கழகம் எந்த ஒரு கூட்டணி முயற்சியிலும் ஈடுப்படவில்லை. தமிழகம் முழுவதும் அண்ணா திராவிடர் கழகம் சார்பில் 18 பேர் போட்டியிட உள்ளனர்.

  திராவிடத்தில் தெய்வ மறுப்பு என்பதே கிடையாது. ஜெயலலிதா இருக்கும் போதே சசிகலாவுக்கு பாதுகாப்பு இல்லை. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க பல்வேறு உதவிகளை செய்துள்ளேன். ஜெயலலிதாவின் ஆட்சி தொடருவதற்காக சசிகலா பிரார்த்தனை செய்து வருகிறார். நமது எம். ஜி.ஆர் பத்திரிக்கை, ஜெயா தொலைக்காட்சியை அ.தி.மு.க தலைமையிடம் ஒப்படைக்க சசிகலா நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிகலா அரசியலை விட்டு விலகி இருப்பது சரியான முடிவு
  சசிகலாவை நான் சிறையில் என்றும் நேரில் சென்று சந்திக்கவில்லை. ஜெயகுமார், சி.வி.சண்முகம் இருவரும் அ.தி.மு.க-வை சேர்ந்தவர்கள் இல்லை. அதிமுக வேட்பாளர் பட்டியல் 99சதவீதம் சரியானது.தேர்தல் முடிந்தாலும் சசிகலாவை சந்திக்க மாட்டேன். இதுவரை 119 பேர் சசிகலாவை ஏமாற்றியுள்ளனர்” என திவாகரன் தெரிவித்துள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: