பிற கட்சிகள் ஆட்சி அமைக்க பாமகவை தொடங்கவில்லை - அன்புமணி ராமதாஸ்

பிற கட்சிகள் ஆட்சி அமைக்க பாமகவை தொடங்கவில்லை - அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
  • Share this:
தமிழகத்தில் பிற கட்சிகள் ஆட்சி அமைப்பதற்காக தாங்கள் கட்சி தொடங்கவில்லை என்று, பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அக்கட்சியின் முப்படைகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில், பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,


”கட்சி தொடங்குகின்ற அத்தனைபேரும் அடுத்தது எங்கள் ஆட்சிதான் என்று சொல்வார்கள். நாங்கள் கட்சியை தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிறது.  அ. தி.மு.க , தி.மு.க., காங்கிரஸ் , போன்ற கட்சிகள் ஆட்சி செய்வதற்காக நாங்கள் கட்சியை தொடங்க வில்லை. எங்கள் கட்சி ஆட்சி அமைப்பதற்காக நாங்கள் கட்சியை தொடங்கி இருக்கிறோம்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாங்கள் கூட்டணியில் இருப்பமோ, இல்லையா ? அப்படி இருந்தால் யாருடன் இருப்போம் என்பதையெல்லாம் தேர்தலுக்கு முன் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தான் முடிவு செய்வார்” என்றார்.

Also Watch:
First published: March 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading