கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று கும்பகோணம் தொகுதி வேட்பாளர் பாலமுருகன் திருவிடைமருதூர் தொகுதி வேட்பாளர் குடந்தை அரசன் ஆகியோரை ஆதரித்து உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், புரட்சித் தலைவரால் தீய சக்தி என அழைக்கப்பட்ட திமுக கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை. ஆட்சிக்கு வந்தால் வாய்ப்புக் கிடைத்தது என்று காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்தது போல் பொதுமக்களின் செல்வங்களை சூறையாடிவிடுவார்கள்.
இரு கட்சிகளும் வீட்டுப் பெண்களுக்கு ரூ.1000 மற்றும் ரூ.1500 என ஏலம் போட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் அ.ம.மு.க ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை பாதிக்கக்கூடிய மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை அனுமதிக்க மாட்டோம். தனியார் சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகள் பெற்றுத் தரப்படும். விவசாயிகள் அறுவடை செய்த நெல் விவசாய நிலங்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்யப்படும்.
நெல் மூட்டை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000 வழங்கப்படும் எனவும் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிகளை ஒன்றிணைத்து கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும்.தீய சக்தியையும் துரோக சக்திகளையும் அழிக்கின்ற மாற்று சக்தியாக அம்மா சக்தியாக தர்ம சத்தியா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விளங்குகிறது என்றும் நடுநிலையான உண்மையான ஜனநாயக ஆட்சி அமைந்திட மக்கள் அ.ம.மு.க கூட்டணியை ஆதரிக்க வேண்டும்’என்று வேண்டுகோள் விடுத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, AMMK, DMK, Kumbakonam Constituency, TN Assembly Election 2021, TTV Dhinakaran