புதுச்சேரி மங்கலம் தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடுபவர் முரளிதரன். 45 வயதாகும் இவருக்கு
கடந்த பிப்ரவரி-3 ம் தேதி திருமணம் நடைபெற்றது. சமூக சேவை மற்றும் அரசியலில் ஈடுபட்டதால் நிறைய வரன்கள் தடைபட்டது. மார்ச் 18 ம் தேதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 19 ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.அன்று முதல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நான் வெற்றி பெற்றால் மக்களை தேடிச்சென்று சேவையாற்றுவேன். மக்கள் என்னை தேடி வர வாய்ப்பளிக்காமல் அவர்களை சென்று பார்ப்பேன். சின்ன வயதில் இருந்து அரசியல் தவிர வேறு எதுவும் தெரியாது. மக்களுக்காக செயல்பட்டு வருகிறேன்.வெற்றிபெற்றால் புதுச்சேரியின் முதன்மை தொகுதியாக வில்லியனூரை மாற்று.
தன்னை எதிர்த்துப் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும் உள்ளூர்க்காரர்கள் இல்லை என்றார் அமமுக வேட்பாளர் முரளிதரன்.
மேலும் திருமணம் முடிந்து மனைவியுடன் சரியாக கூட பேசவில்லை என கூறும் அவர் தேன்நிலவுக்கு கூட செல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி விட்டதாக வெட்கத்துடன் கூறுகிறார். தான் வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு முறையாக நேரடி நியமனம் மூலம் அரசு வேலை வாங்கித் தருவேன், அரசு துறையில் காலியாக உள்ள 9000 அரசை பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.தொகுதி முழுவதும் அனைத்து கிராமங்களிலும் தொகுதி அலுவலகம் வைத்து மக்களை நேரடியாக சந்திப்பேன்.
கிராமங்களில் தேவைக்கேற்ப கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும், சிறுவர்கள்- இளைஞர்கள்- முதியவர்கள் ஆகியோர் பயிற்சி பெற விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். தேர்தலை அறிக்கைகளை வெளியிட்டுள்ள அவர் தனது தொலைபேசி எண்ணையும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதனை 3 ஆண்டுகளுக்குள் செய்யாவிட்டால் என்னை மக்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார்