அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகை

அமித்ஷா

பிரதமர் மோடியைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமித் ஷா தேர்தல் பிரசாரத்துக்காக இன்று தமிழகம், புதுச்சேரி வருகிறார்.

 • Share this:
  தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு, வருகிற 6ம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இறுதிகட்ட தேர்தல் பரப்புரைப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழகம், புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்டார்.

  இதனைதொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இன்று வருகை தருகிறார். அதன்படி இன்று காலை புதுச்சேரி வரும் அவர், பத்து மணி அளவில் கருவடிகுப்பத்தில் உள்ள சித்தானந்தா கோயிலுக்கு செல்கிறார்.

  பின்னர், லாஸ்பேட்டையில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்தில் அவர் கலந்துகொள்கிறார். அதனைதொடர்ந்து தமிழகத்துக்கு வருகை தரும் அமித் ஷா, பிற்பகல் 12:15 மணிக்கு, திருக்கோயிலூரில் நடைபெற்றும் பிரசார பேரணியில் பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு வேலாயுதம்பாளையத்தில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
  Published by:Vijay R
  First published: