• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • அர்விந்த் கெஜ்ரிவாலை வீழ்த்த முதல்வர் வேட்பாளர் தேர்வில் தனிக்கவனம் - அமித்ஷா

அர்விந்த் கெஜ்ரிவாலை வீழ்த்த முதல்வர் வேட்பாளர் தேர்வில் தனிக்கவனம் - அமித்ஷா

அமித்ஷா

அமித்ஷா

  • News18
  • Last Updated :
  • Share this:
டெல்லி சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், முதல்வர் வேட்பாளர் தேர்வில் தனிக்கவனம் செலுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நியூஸ் 18-க்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளார்.

தலைநகர் டெல்லி சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. கடந்த தேர்தலில் கிரண் பேடியை பாஜக முதல்வர் வேட்பாளராக நிறுத்தி தேர்தலை சந்தித்து, ஆம் ஆத்மி கட்சியிடம் படுதோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில், நியூஸ் 18 குழுமத்தின் தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஸிக்கு உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அளித்த பேட்டியில், டெல்லி தேர்தலில் முதல்வர் வேட்பாளர் தேர்வில் பாஜக தனிக்கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.

“ஆம் ஆத்மி அரசுக்கு பாஜகவே மாற்று என்பது மறுக்க முடியாத கருத்து. டெல்லியில் நடந்த மக்களவை தேர்தல், மாநகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றியை பெற்றது. சட்டமன்ற தேர்தலிலும் இது தொடரும். முதல்வர் வேட்பாளரை பாஜக இன்னும் முடிவு செய்யவில்லை. எனினும், பாஜக இதில் தனிக்கவனம் செலுத்தும்” என்று அமித்ஷா கூறியுள்ளார்.

மேலும், பல விவகாரங்கள் தொடர்பாக அமித்ஷா பேசியுள்ள நேர்காணல் இன்று இரவு நியூஸ் 18 தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: