பஞ்சாப் முதல்வரின் ஆலோசகரானார் பிரஷாந்த் கிஷோர்..

பஞ்சாப் முதல்வரின் ஆலோசகரானார் பிரஷாந்த் கிஷோர்..

பிரஷாந்த் கிஷோர்

பஞ்சாப் மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதற்காக பிரஷாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அமரிந்தர் சிங் கூறியுள்ளார்.

 • Share this:
  பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிரஷாந்த் கிஷோர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

  பஞ்சாப் மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதற்காக பிரஷாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அமரிந்தர் சிங் கூறியுள்ளார். அரசியல் ஆலோசகரான பிரஷாந்த் கிஷோர் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாநில தேர்தலின் போது வியூகங்கள் வகுத்து அரசியல் கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

  2017-ஆம் ஆண்டு பஞ்சாபில் சட்டமன்ற தேர்தல் நடந்தபோதும் அமரிந்தர் சிங்குக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கி இருந்தார். இதனையடுத்து அடுத்தாண்டு அங்கு மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பிரஷாந்த் கிஷோரை மீண்டும் பணியமர்த்தி தற்போதே தேர்தல் பணிகளை அமரிந்தர் சிங் முன்னெடுத்து உள்ளார். வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுகவிலும் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் செயலாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Sankaravadivoo G
  First published: