வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கினால் தான் அதிமுக உடன் கூட்டணி - மருத்துவர் ராமதாஸ் திட்டவட்டம்!

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கினால் தான் அதிமுக உடன் கூட்டணி - மருத்துவர் ராமதாஸ் திட்டவட்டம்!

ராமதாஸ்

4 அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து உடன்பாடு எட்டவில்லை எனவும் மீண்டும் வரும் புதன் கிழமை அமைச்சர்கள் , ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்துவர் எனவும் கூறப்படுகிறது.

  • Share this:
பாமகவின் அவசர நிர்வாகிகள் குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு மற்றும் கூட்டணி முடிவுகள் தொடர்பாக முடிவுகள் எட்டப்படும் என கூறப்பட்ட நிலையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கினால் தான் அதிமுக உடன் கூட்டணி என ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள பரபரப்பான சூழ்நிலையில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் தீவிரப்படுத்தியுள்ளார்.

இதற்காக கடந்த சில நாட்களாக பாமக சார்பில் தமிழகம் முழுவதும் பல கட்டமாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸுடன் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் நேற்றிரவு சந்தித்து பேசினர்.

மாதிரிப் படம்


4 அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து உடன்பாடு எட்டவில்லை எனவும் மீண்டும் வரும் புதன் கிழமை அமைச்சர்கள் , ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்துவர் எனவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவசர நிர்வாகிகள் குழு கூட்டத்திற்கு பாமக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த ராமதாஸ், மற்ற ஜாதி அமைப்புகள் இட ஒதுக்கீடு கேட்பதாக கூறி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என அமைச்சர்கள் கூறுவதாக ராமதாஸ் நிர்வாக குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசி உள்ளார்.

வன்னியர்களின் உணர்வுப்பூர்வமான போரட்டத்திற்கு அதிமுக மதிப்பு அளித்தால் உள் இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டும் தான் கூட்டணி என ராமதாஸ் பேசியிருக்கிறார்.

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை நானே களமிறங்கி நடத்துவேன் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டம், கூட்டணி கணக்கை மாற்றியமைக்குமா என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
Published by:Arun
First published: