அனைத்து மாவட்ட செயலாளர்கள் இன்று மாலை சென்னையில் இருக்க வேண்டும் - அதிமுக உத்தரவு

அஇஅதிமுக அலுவலகம்

 • Share this:
  அனைத்து மாவட்ட செயலாளர்கள் இன்று மாலை சென்னையில் இருக்க வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

  சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் இன்று மாலை சென்னையில் இருக்க வேண்டும் என அதிமுக உத்தரவிட்டுள்ளது.  சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் தேர்வு ஒரிரு நாளில் இறுதி செய்யப்பட உள்ளதால் மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. பாமக-விற்கு 23 தொகுதிகளும், பாஜக-விற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.
  Published by:Vijay R
  First published: