தெருவில் குத்தாட்டம் போட்ட அக்‌ஷரா ஹாசன் - கமலுக்கு ஆதரவாக கோவையில் வாக்கு சேகரிப்பு

அக்‌ஷரா ஹாசன்

கோவையில் கமல் ஹாசனுக்கு ஆதரவாக அவரது மகள் அக்‌ஷரா ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

 • Share this:
  தமிழக தேர்தல் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கோவையில் முகாமிட்டுள்ள கமல் ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கமல் ஹாசனை எதிர்த்து கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகின்றனர்.

  கோவையில் கமல் ஹாசனுக்கு ஆதரவாக அவரது மகள் அக்‌ஷரா ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில தினங்களாக கமலின் பிரச்சார வாகனத்தில் அக்‌ஷ்ராவை பார்க்க முடிந்தது. கமல் ஹாசனுக்கு ஆதரவாக நடிகை சுஹாசினி மணிரத்னம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

     இந்நிலையில் அக்‌ஷராவும், சுஹாசினியும் கமலுக்கு ஆதரவாக வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தெருவில் மேளத்தாளம் முழங்க அக்‌ஷ்ராவை குத்தாட்டம் போட்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார் . கையில் கமலின் சின்னமான டார்ச்லைட் காண்பித்தவாறு சுஹாசினியும் நடனமாடினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: