• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • திமுக ஸ்டார் வேட்பாளர்களை டார்கெட் செய்யும் அதிமுக - தமிழகத்தில் 7 தொகுதிகளில் தேர்தல் ரத்தாக வாய்ப்பு?

திமுக ஸ்டார் வேட்பாளர்களை டார்கெட் செய்யும் அதிமுக - தமிழகத்தில் 7 தொகுதிகளில் தேர்தல் ரத்தாக வாய்ப்பு?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தி.மு.க பணப் பட்டுவாடா செய்வதாக குற்றம் சாட்டி 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்தில் கடிதம் அளித்துள்ளது அ.தி.மு.க தரப்பு.

  • Share this:
    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் 7 தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பபடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மேற்கு, கரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. இந்த தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகமாக நடந்ததால் தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் உள்ள மற்ற தொகுதிகளை விட இங்கு அதிக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு செலவின பார்வையாளர்கள் அறிக்கை அளித்துள்ளனர்.

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, “தமிழகத்தில் இதுவரை ரூ.428.46 கோடி நகை, பணம்,பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.225. 40 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ரூ.57.70 கோடி நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் ரூ.55.48 கோடி, சேலம் ரூ.44.88 கோடி, திருப்பூர் ரூ.15.43 கோடி நகை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

    தி.மு.க பணப் பட்டுவாடா செய்வதாக குற்றம் சாட்டி 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்தில் கடிதம் அளித்துள்ளது அ.தி.மு.க தரப்பு. தமிழக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் அளித்துள்ள புகார் கடிதத்தில், கொளத்தூர் , சேப்பாக்கம், திருச்சி மேற்கு, காட்பாடி மற்றும் திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் அதிகமாக பணப்பட்டுவாடா நடைபெறுவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக குறிப்பிட்டுள்ள 5 தொகுதிகளும் ஸ்டார் தொகுதிகளாக பார்க்கப்படுகிறது.

    கொளத்தூர் தொகுதியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் போட்டியிடுகிறார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். திருச்சி மேற்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, காட்பாடியில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், திருவண்ணாமலையில் எ.வ.வேலு போட்டியிடுகின்றனர்.தி.மு.க-வின் முக்கிய தலைகளை டார்கெட் செய்து அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: