அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இன்று மாலை ஆலோசனை

Youtube Video

தலைவர்களின் பரப்புரைத் திட்டம், பொதுக்குழு கூடும் தேதி உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எப்போது கூட்டலாம் என்பது குறித்து இன்று கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 6.30 மணிக்கு கூட்டம் நடக்கிறது. இதில் துணை ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ள நிலையில், மற்ற தலைவர்களின் பரப்புரைத் திட்டம், பொதுக்குழு கூடும் தேதி உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்..
Published by:Yuvaraj V
First published: