குடும்பத் தலைவிகளை அ.தி.மு.க அரசு இரு கண்களாகப் பார்த்துக்கொள்ளும் - அமைச்சரின் பேச்சால் சிரிப்பலை

குடும்பத் தலைவிகளை அ.தி.மு.க அரசு இரு கண்களாகப் பார்த்துக்கொள்ளும் - அமைச்சரின் பேச்சால் சிரிப்பலை

எம்.சி.சம்பத்

குடும்ப தலைவிகளுக்கு இனி வீட்டுகாரர் தயவு தேவையில்லை. அதிமுக அரசு இரு கண்களை போன்று பார்ததுகொள்ளும் என அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியுள்ளார்.

 • Share this:
  தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க போட்டியிடுகிறது. தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக களமிறங்குகிறார். தொகுதியில் கடந்த நான்கு நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் அமைச்சர் சம்பத் ஈடுபட்டு வருகிறார்.

  இந்நிலையில் கடலூரையடுத்த குண்டு உப்பலவாடி பகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு சேர்ந்து மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசியவர், “அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் வருடத்திறக்கு 6 சிலிண்டர இலவசம். குடும்ப தலைவிகளுக்கு 1,500 ரூபாய். ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என பெண்களுக்கான அரசாக உள்ளது. எனவே குடும்ப தலைவிகளுக்கு இனி வீட்டுகாரர் தயவு தேவையில்லை. குடும்ப தலைவிகளை அதிமுக அரசு இரு கண்களை போன்று பார்ததுகொள்ளும்” என்றார்.  அமைச்சரின் பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

  செய்தியாளர்: பிரேம் ஆனந்த்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: