ஜனவரி 9-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு- செயற்குழு கூட்டம்

ஜனவரி 9-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு- செயற்குழு கூட்டம்

அஇஅதிமுக அலுவலகம்

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஜனவரி 9-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு- செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் வானகரம் வெங்கடாஜலபதி பேலஸ் திருமணமண்டபத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த கூட்டம், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 3500 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கூட்டத்திற்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை முடிவுகளுடன் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  சில மாதங்களில், தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலைமையில் இந்த கூட்டம் நடத்தப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  Published by:Suresh V
  First published: