Home /News /politics /

கூட்டணியை அறிவிக்கும் அதிகாரத்தை வி.பி துரைசாமிக்கு பாஜக வழங்கியிருக்கிறதா...? கே.பி முனுசாமி கேள்வி

கூட்டணியை அறிவிக்கும் அதிகாரத்தை வி.பி துரைசாமிக்கு பாஜக வழங்கியிருக்கிறதா...? கே.பி முனுசாமி கேள்வி

கே.பி முனுசாமி

கே.பி முனுசாமி

அதிமுக தலைமையில் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருவதாக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி மற்றும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனிசாமி, தேர்தல் ஆணையம் சில கருத்துக்களை கேட்டுள்ளது. அதை தயார் செய்வது தொடர்பாக சட்டத் துறை அமைச்சரிடம் பேசினோம் என தெரிவித்தார்.

தேர்தல் பணியை அதிமுக நீண்ட காலத்துக்கு முன்பாகவே தொடங்கிவிட்டதாகவும், வேட்பாளர் தேர்வு தொடர்பாக உரிய காலத்தில் உரிய நேரத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேசி முடிவெடுப்பார்கள் என்றார்.

Also read... இளம் பெண்ணுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பி தொந்தரவு செய்த டெலிவரி ஊழியர் கைது!

பா.ஜ.க. தலைமையில் தான் கூட்டணி என அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறிய கருத்துக்கு பதிலளித்த முனுசாமி, நேற்று வரை வேறு கட்சியில் இருந்த ஒருவர், தற்போது பாஜகவில் சேர்ந்ததும் பாஜக தலைமையில் தான் கூட்டணி என கூறியுள்ளார்.



அவருக்கு அந்த அதிகாரத்தை கட்சி தலைமை வழங்கி இருக்கிறதா என்று கூட தெரியவில்லை என பதிலளித்தார். மேலும், பாஜகவுடனான கூட்டணி தொடர்பாக அக்கட்சியின் தலைவர் முருகன் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், அவரே அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளதை ஒத்துக்கொண்டுள்ளார். எனவே கூட்டணி குறித்த கேள்வியே தேவையில்லை என்று கூறினார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: ADMK, TN Assembly Election 2021

அடுத்த செய்தி