பிரதமர் மோடி, ஜனாதிபதி தடுப்பூசிய எடுத்து கொள்ள வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, கொரோனா தடுப்பூசி, சசிகலா விடுதலை ஆகியன குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் கட்சிகளுக்கு இடையிலான வார்த்தைப் போர்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், சிவகங்கை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, கொரோனா தடுப்பூசி, சசிகலா விடுதலை ஆகியன குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ``டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட 56 நபர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் தலைவர்கள் பரிசோதனை செய்துகொண்ட பின்னரே மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. ஆனால், இந்தியாவில் தலைகீழாக நடக்கிறது. எனவே, முதற்கட்டமாக பிரதமர் மற்றும் ஜனாதிபதி தடுப்பூசி போட்டுக்கொண்டு பரிசோதனை செய்த பின்னர் மக்களுக்கு பரிசோதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

  இதனைத் தொடர்ந்து கூட்டணி குறித்து பேசிய அவர், ``கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், ``சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுக அவரின் காலடியில் இருக்கும்” எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
  Published by:Ram Sankar
  First published: