இளைஞர்கள் வாக்குகளை கவர புது யுக்தி ; அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அறிமுகம் செய்துள்ள வேலைவாய்ப்பு இணையதளம்

இளைஞர்கள் வாக்குகளை கவர புது யுக்தி ; அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அறிமுகம் செய்துள்ள வேலைவாய்ப்பு இணையதளம்

திருப்பரங்குன்றம் தொகுதி இளைஞர்களின் வாக்குகளை கவரும் நோக்கில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா பிரயத்யேக வேலை வாய்ப்பு இணையதளத்தை துவக்கியுள்ளார் .

 • Share this:
  திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதி இளைஞர், இளம் பெண்களின் 100 சதவீத வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் பிரத்யேகமாக TPKJOBS.COM என்ற பிரயத்யேக வேலை வாய்ப்பு இணையதளத்தை துவக்கியுள்ளார்.

  வேலை வாய்ப்பற்ற இளைஞர், இளம் பெண்களுக்காக தகவல் தொழில்நுட்பம், மருத்துவ துறை, பொறியியல், வேளாண் துறை, பயோடெக், வங்கி துறை, ஆட்டோ மொபைல் உள்ளிட்ட அனைத்து வகையான துறைகள் சார்ந்த 200 நிறுவனங்களில் பணி வாய்ப்பை எளிமையான முறையில் பெற்றுத்தரும் வகையில் இந்த இணையதள சேவை துவங்கப்பட்டுள்ளது.

  இதற்கென தமிழகம் முழுவதும் 200 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பயன்பெற விரும்பும் இளைஞர்கள், இளம்பெண்கள் TPK JOBS.COM என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்து கொண்டால் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, பின்னர் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் எனவும் தற்பொழுது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மே 3ம் தேதி முதல் இணையதள சேவை மூலம் அனைவரும் பயன்பெற்று வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளலாம் என சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

  இளைஞர் இளம் பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
  Published by:Vijay R
  First published: