`வாழும் புரட்சித் தலைவரே; எடப்பாடி பழனிசாமி எனும் நான்!’ - அதிமுக நிர்வாகிகளின் பேனரால் களைகட்டும் தேர்தல் களம்

அதிமுக தொண்டர்கள் வைத்த பேனர்

`வாழும் புரட்சித் தலைவரே' என்றும், `எடப்பாடி பழனிசாமி எனும் நான்' என்ற வாசகத்துடன் பாகுபலி கெட்டப்பிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு  வைக்கப்பட்டுள்ள பேனர் தற்போது வைரலாகத் தொடங்கியுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரப் பேச்சுகளும் அவர்களின் தொண்டர்கள் வைக்கும் பேனர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், கரூரில் எம்ஜிஆர் கெட்டப்பில், கருப்பு கண்ணாடி, வெள்ளை தொப்பியுடன் `வாழும் புரட்சித் தலைவரே' என்றும், `எடப்பாடி பழனிசாமி எனும் நான்' என்ற வாசகத்துடன் பாகுபலி கெட்டப்பிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு  வைக்கப்பட்டுள்ள பேனர் தற்போது வைரலாகத் தொடங்கியுள்ளது.

  முதல்வர் எடப்பாடி பழனிசாமியை "நலத்திட்டங்களின் நாயகர்" ,  "குடிமராமத்து நாயகர்" என்ற அடை மொழியுடன் போஸ்டர்களும், கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டு வருகிறது. கரூர் அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராகவும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராகவும் உள்ள முத்துக்குமார் என்பவர் ஒரு படி மேலே சென்று எம்.ஜி.ஆர் கெட்டப்பில்,  எடப்பாடி பழனிச்சாமியை கருப்பு கண்ணாடி, வெள்ளை தொப்பியுடன் வாழும் புரட்சி தலைவரே’ என்றும் எடப்பாடி பழனிச்சாமியை `எடப்பாடி பழனிசாமி எனும் நான்’ என பாகுபலி கெட்டப்பிலும் வைக்கப்பட்ட பேனரால் தேர்தல் களம் களைகட்ட தொடங்கியுள்ளது.

  அதிமுக தொண்டர்கள் வைத்த பேனர்


  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலுக்காக பல்வேறு அதிரடி சலுகை மற்றும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளார். இதன், மூலம் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். முதல்வர் செல்லும் இடங்களில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை விட தனக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகமாக இருக்க வேண்டும் என கேட்டு,  பல மண்டலத்தில் இருந்து போலீசாரை வரவழைத்து தானும் `ஒரு ஜெயலலிதா’ என கெத்தை அதிகாரிகள் மத்தியில் நிருபித்து வருகிறார் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளே கூறும் நிலையில், கரூரில், எம்ஜிஆர் கெட்டப்பில், கருப்பு கண்ணாடி, வெள்ளை தொப்பியுடன் வாழும் புரட்சித் தலைவரே என்ற வாசகத்துடன் எம்ஜிஆராக பார்த்து  ரசித்த தொண்டர்கள், ஆர்வமிகுதியால் அதையும் மீறி"எடப்பாடி பழனிசாமி எனும்  நான்" என்ற வாசகத்துடன் பாகுபலி கெட்டப்பிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைத்துள்ளதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
  Published by:Arun
  First published: