Exclusive: ஓ.பி.ரவிந்தரநாத் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்! அ.தி.மு.க முன்னாள் எம்.பி காட்டம்

  • News18
  • Last Updated: November 19, 2019, 9:48 PM IST
  • Share this:
முத்தலாக் தடைக்கு ஆதரவாக பேசிய ஓ.பி.ரவீந்திரநாத் மீது கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க அரசு முத்தலாக் தடை மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது. முத்தலாக் தடை மசோதா தொடர்பான விவாதத்தின்போது மக்களவையல் பேசிய அ.தி.மு.க உறுப்பினர் ஓ.பி.ரவிந்திரநாத், ‘இந்த மசோதா பெண்களுக்கு சம உரிமை வழங்கும்’ என்று ஆதரவு தெரிவித்து பேசியிருந்தார். ஆனால், மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க உறுப்பினர்கள் நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அதிமுக எம்.பி. அன்வர் ராஜா



இந்தநிலையில், நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அ.தி.மு.கவின் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, ‘முத்தலாக் தடை மசோதாவை ஆதரித்து பேசிய ஓ.பி.ரவிந்திரநாத் மீது கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும். முத்தலாக் மசோதாவை ஆதரித்து ஓ.பன்னீர் செல்வமே பேசியிருந்தாலும் தவறுதான்’ என்று தெரிவித்துள்ளார். அவருடைய கருத்து அ.தி.மு.கவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see:
First published: November 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading