ADMK SELLUR RAJU SUPPORTER ARREST FOR MONEY DISTRIBUTES COMPLAINT VJR
அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் - ஒருவர் கைது
கோப்புப் படம்
அமைச்சர் செல்லூர் ராஜூ க்கு ஓட்டளிக்க கோரி அவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக நாம் தமிழர் வேட்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக சார்பில் சின்னம்மாள் ஆகியோர் களம் காண்கின்றனர். இவர்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றிக்குமரன் போட்டியிடுகிறார்.
இன்று காலை சுமார் 8:40 மணி அளவில் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொக்கலிங்கம் நகர் பகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி குமரன் நேரில் சென்றுள்ளார்.
அங்கு மூன்று நபர்கள் பண பட்டுவாடா செய்து கொண்டிருந்ததாகவும், அதில் இருவர் தப்பிய நிலையில், ஒருவரை கையும் களவுமாகப் பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்து உள்ளனர்.
அதனை தொடர்ந்து, தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்யுமாறு தேர்தல் அதிகாரியிடம் புகாரளித்த நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர் செல்லூர் ராஜூ வை தகுதி நீக்கம் செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்