தேமுதிக, தமாகா உடன் அதிமுக தொகுதி பங்கீடு இன்று உறுதியாக வாய்ப்பு

தேமுதிக, தமாகா உடன் அதிமுக தொகுதி பங்கீடு இன்று உறுதியாக வாய்ப்பு

கோப்பு படம்

சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் வரை தருவதற்கு அதிமுக முன்வந்துள்ளது.

  • Share this:
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உடன்பாடு இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து, தொகுதி பங்கீடு தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துடன், தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் வரை தருவதற்கு அதிமுக முன்வந்துள்ள சூழ்நிலையில், இன்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல அதிமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்திய சூழலில், இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை இலக்கத் தொகுதிகள், சைக்கிள் சின்னத்தில் போட்டி என ஜி.கே.வாசன் வலியுறுத்தியதாக தகவல் வெளியான நிலையில், அதிமுக தரப்பில் மூன்று அல்லது நான்கு தொகுதிகள் வரை வழங்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 7 தொகுதிகள் வழங்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published by:Vijay R
First published: