• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • ‘இது என் சொந்தக்கார தொகுதிங்க..! மக்களுக்காக போட்டி’- ட்விஸ்ட் அடிக்கும் கே.டி.ராஜேந்திரபாலாஜி

‘இது என் சொந்தக்கார தொகுதிங்க..! மக்களுக்காக போட்டி’- ட்விஸ்ட் அடிக்கும் கே.டி.ராஜேந்திரபாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ஆன்மீகத்திற்கு புறம்பாக எந்த செயலையும் நான் செய்ய மாட்டேன், சமுதாயத்திற்கு ஒவ்வாத செயலை உறுதியாக செய்ய மாட்டேன் பிறரைக் கெடுக்கின்ற செயலை ஒரு காலமும் செய்யமாட்டேன்.

  • Share this:
    சர்ச்சையான பேச்சுக்கு சொந்தக்காரர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. மோடி தான் எங்கள் டாடி என அ.தி.மு.க-வினருக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர்தான் நம்ம ராஜேந்திர பாலாஜி. 2011 ,2016 சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் கண்டார். தற்போது அமைச்சராக வலம் வருகிறார்.

    அ.தி.மு.க இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது. சொந்த தொகுதியான சிவகாசியை விட்டு ராஜபாளையம் தொகுதியை அமைச்சர் கேட்டு வாங்கியதாக கூறப்படுகிறது. சிவகாசியில் அமைச்சரின் செல்வாக்கு சரியத்தொடங்கியதால் ராஜபாளையத்தில் களம் காண்கிறார் என்ற பேச்சு அடிப்படுகிறது.

    ராஜபாளையம் பகுதியில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து தனது தேர்தல் பரப்புரையை ராஜேந்திர பாலாஜி தொடங்கினார். அப்போது பேசிய ராஜேந்திர பாலாஜி, ’ராஜபாளையம் சொந்தத் தொகுதியா என்று கேட்டால் என் சொந்தக்கார தொகுதி. ராஜபாளையம் தொகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். ரயில்வே மேம்பால பணிகளை துவக்கி வைத்தவன் நான்.ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று எனக்கே தெரியாது. நான் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது ராஜபாளையம் தொகுதிக்கு பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.

    ராஜபாளையம் ஆன்மீக பூமி, விடுபட்டுப் போன அனைத்து திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவேன் .உங்கள் வீட்டுப் பிள்ளையாக நான் பணியாற்றுவேன்.ராஜபாளையம் பகுதியில் எனக்கு விவசாய நிலம் வீடும் இருக்கிறது. ராஜபாளையம் மக்கள் எங்கள் தொகுதியில் நீங்கள் போட்டியிடுங்கள் என்று கூறியதன் காரணமாக நான் போட்டியிட்டுள்ளேன். ஆன்மீகத்திற்கு புறம்பாக எந்த செயலையும் நான் செய்ய மாட்டேன், சமுதாயத்திற்கு ஒவ்வாத செயலை உறுதியாக செய்ய மாட்டேன் பிறரைக் கெடுக்கின்ற செயலை ஒரு காலமும் செய்யமாட்டேன். என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர்” என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: