அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா..? விஸ்வாசமாக உள்ளவரை களமிறக்குவோம்: அமைச்சர் அதிரடி

Youtube Video

  • Share this:
நடிகர் அஜித்தை அரசியலில் களமிறக்குவோம் என்று அதிமுக அமைச்சர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு சினிமா பயணத்தை கவுரவிக்கும் வகையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், "உங்கள் நான்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

ரஜினி, இளையராஜா, விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “2 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் ஆவோம்” என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 4 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று அனைவருமே சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது. நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும்”என்றார்.

Video:

ரஜினியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிர்ஷ்டத்தையும், அற்புதத்தையும் நம்பி அதிமுக இல்லை. மக்களை நம்பி உள்ளோம். அதிமுக என்ற மாபெரும் சிங்கத்தை, ரஜினி, கமல் என யார் இணைந்து வந்தாலும் அசைக்க முடியாது” என்றார்.

இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ரஜினி, கமல், விஜய் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? நடிகர் அஜித் வரக்கூடாதா?. மக்களுக்கு இடையறாது தொண்டாற்றுகின்ற அஇஅதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்கள் களமிறக்குவோம் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேட்டி பதிவிடப்பட்டுள்ளது.

விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  “ரஜினி, கமல், விஜய் மட்டும்தான் அரசியலுக்கு வர வேண்டுமா ஏன் அஜீத் வர கூடாதா? எங்க தல வர கூடாதா, நாளை என்ன நடக்கும் என்பது நாளைக்குத் தான் தெரியும். நாங்கள் அதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்கள் களமிறக்குவோம்.

பாட்ஷா படத்தின்போதே ரஜினி அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். காலம்தாழ்த்திவிட்டார். ரஜினிகாந்த் மூப்பனார் செல்வாக்கை பயன்படுத்தி கருணாநிதி அப்போது முதலமைச்சராகிவிட்டார்” என்று கூறியுள்ளார்.அமைச்சரின் கருத்தை பலரும் ரீ டிவீட் செய்து வருகின்றனர்.


Published by:Sheik Hanifah
First published: