கடுமையாக உழைத்து ஈபிஎஸ்-ஐ முதலமைச்சர் ஆக்க அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

Youtube Video

கடுமையாக உழைத்து ஈபிஎஸ்-ஐ முதலமைச்சர் ஆக்குவது எனவும், பக்குவமின்றி விவாதிக்கும் திமுகவினரை கண்டிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 • Share this:
  முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், நிறைவேற்றப்பட்டன.

  அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும், 2 மணி நேரம் தாமதமாக 11 மணியளவில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செலவம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் , மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

  தொடர்ந்து, பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கூட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை 16 தீர்மானங்களை வாசித்தார்.

  அதன்படி,  எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வதாகவும்,  கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவருக்கும் வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  கடுமையாக உழைத்து ஈபிஎஸ்-ஐ முதலமைச்சர் ஆக்குவது எனவும், பக்குவமின்றி விவாதிக்கும் திமுகவினரை கண்டிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என அறிவித்தது,  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது, பொங்கல் பரிசாக இரண்டாயிரத்து 500 ரூபாய் வழங்குவது, மினி கிளினிக்குகள் போன்ற மக்கள் நலத் திட்டங்களை அறிவித்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  அதிமுக பொதுக்குழுவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களுக்குப் பிறகு 16 ஏ என்ற துணை தீர்மானம் கொண்டுவரப்பட்டு வழிகாட்டுதல் குழுவிற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
  Published by:Yuvaraj V
  First published: