ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு சமம்: அம்மா உணவகத் தாக்குதல் குறித்து அதிமுக கண்டனம்

ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு சமம்: அம்மா உணவகத் தாக்குதல் குறித்து அதிமுக கண்டனம்

சென்னையில் அம்மா உணவகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பானது என அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது

சென்னையில் அம்மா உணவகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பானது என அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது

 • Share this:
  சென்னையில் அம்மா உணவகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பானது என அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

  சென்னை முகப்பேர் கிழக்கு ஜேஜே நகர் பகுதியில் திமுகவை சேர்ந்த இருவர், அங்கிருந்த அம்மா உணவகத்தில் இருந்த பெயர் பலகை வெளியே எடுத்து வந்து சாலையில் வீசி எரிந்துள்ளனர். மேலும் அம்மா உணவகத்தில் நுழைந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி, அம்மா உணவகம் என்ற பெயர்ப்பலகை தொங்க விடக்கூடாது என அங்கிருந்த ஊழியர்களை எச்சரித்து சென்று உள்ளனர்.

  திமுகவினர் அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சேதப்படுத்தப்பட்ட பெயர் பலகை சரி செய்யப்பட்டு மீண்டும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

  அம்மா உணவகம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள அம்மா உணவகம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

  ஜெயலலிதாவின் சிந்தையில் உதித்த, மக்களுக்கான அம்மா உணவகம் திட்டத்தின் சிறப்பை உணர்ந்து இன்றளவும் அண்டை மாநிலங்கள் தொடங்கி அயல்நாடுகள் வரை இத்திட்டத்தை பின்பற்றி வருகின்றன.

  பெருமழை, பெருவெள்ளம் தொடங்கி, கொரோனா பேரிடர் காலங்கள் வரை உணவின்றி தவித்தோரின் பசிப் பிணி நீக்கிய அட்சய பாத்திரம் அம்மா உணவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும்.

  ஜெயலலிதா படத்தினை சேதப்படுத்தி உள்ளதும் வேதனை அளிக்கிறது. இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
  புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை சீர்குலைப்போர் மீது உடனடியாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என  தெரிவிக்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: