அதிமுகவின் முதல்வர் வேட்பாளராகியுள்ள எடப்பாடி பழனிசாமி முன் இருக்கும் சவால்கள் என்ன?

Youtube Video

பல்வேறு அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி முன் இருக்கும் சவால்கள் என்ன? எதிர்கட்சிகளின் கூட்டணி வியூகத்தை முறியடித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவாரா?

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா? என்கிற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்து தேர்தலை சந்தித்தது அதிமுக. இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுகளால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், இடைத்தேர்தல் வெற்றியால் ஆட்சியை தக்கவைத்தது அதிமுக.

  இந்நிலையில், அதிமுக நீண்ட இழுபறி பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

  கட்சிக்குள் தனக்கான செல்வாக்கை உயர்த்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, அணிகளாக உள்ள அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மேலும் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் என்பதால், தனக்கென ஆளுமையை நிருபிக்க வேண்டிய கட்டாயமும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. தற்போது அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக, தாமாக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இதே கட்சிகளுடன் கூட்டணி தொடருமா என்பதும் முக்கிய கேள்வியாக உள்ளது.

  2016 ஆம் தேர்தலில் ஆண்டு தனித்து போட்டியிட்ட அதிமுக, 2021ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் முக்கிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் சூழலில் உள்ளது, அப்படியென்றால் அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தன்னை முன் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.G

  கொரோனா தொற்று கால செயல்பாடு, தமிழர்களுக்கு எதிரான சட்டங்களை ஆதரிப்பது உள்ளிட்ட காரணங்களால் அதிமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக திமுக கூறுகிறது.

   

  முதல்முறையாக தன்னை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தலில் வெற்றி பெற்று தான் ஒரு செல்வாக்கு மிக்க தலைவர் என்பதை நிரூபிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

   
  Published by:Sankar
  First published: