அதிமுக கூட்டணியில், எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது என்பதை இறுதி செய்யும் பணிகள் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் செய்திகள்
தேமுதிக, தமாக உடன் அதிமுக தொகுதி பங்கீடு இன்று உறுதியாக வாய்ப்பு
இப்படியெல்லாம் காப்பி அடிச்சா பெயில் ஆயிடுவீங்க - திமுக-வை கிண்டலடித்த நடிகை ஸ்ரீப்ரியா
தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் உடனடியாக ராஜினாமா - சீமான்
தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை நெருங்கி உ்ளளது. திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிட் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடை முடித்துள்ளது. அதேப்போன்று அதிமுக தனது கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவு செய்துள்ளது. தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக இன்று தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பாமகவிற்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அதேபோன்று மற்றொறு கூட்டணிக் கட்சியான பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
குறிப்பிட்ட 5 தொகுதிகளை, அதிமுக, பாஜக மற்றும் பாமக ஆகிய 3 கட்சிகளும் போட்டியிட முனைப்பு காட்டுவதால், அவற்றை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கொங்கு மண்டலத்தில் முக்கிய தொகுதிகளை பாஜக கேட்டு வருகிறது. இந்த தொகுதிகளை பாகஜ-விற்கு ஒதுக்கினால் அதிமுக-வின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைவார்கள் என்பதால் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளும் இன்று இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, PMK, Pmk anbumani ramadoss, TN Assembly Election 2021