இப்படியெல்லாம் காப்பி அடிச்சா பெயில் ஆயிடுவீங்க - திமுக-வை கிண்டலடித்த நடிகை ஸ்ரீப்ரியா

இப்படியெல்லாம் காப்பி அடிச்சா பெயில் ஆயிடுவீங்க - திமுக-வை கிண்டலடித்த நடிகை ஸ்ரீப்ரியா

நடிகை ஸ்ரீப்ரியா

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாங்கள் தான் டயலாக் சொல்லி கொடுத்துள்ளது போல், தங்களது திட்டத்தை அறிவித்து வருவதாக கமல்ஹாசன் சாடி இருந்தார்.

  • Share this:
    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தரப்படும் என்ற திமுக-வின் அறிவிப்பை மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியும் நடிகையுமான ஸ்ரீப்பரியா கேலி செய்துள்ளார்.

    தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திமுக-வின் பொதுக் கூட்டம், திருச்சி சிறுகனூரில் நடைபெற்றது. இதற்கு 350 ஏக்கர் பரப்பளவில் ஒன்றரை லட்சம் பேர் அமரும் வகையில், பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்கும் குடும்பத் தலைவியர் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்ட அவர், ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

    Also Read : திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் - திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் வாக்குறுதி

    திமுக-வின் இந்த அறிவிப்புகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட மிண்ட் தங்க சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கமல், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாங்கள் தான் டயலாக் சொல்லி கொடுத்துள்ளது போல், தங்களது திட்டத்தை அறிவித்து வருவதாக சாடினார். இல்லதரசிக்கு ஊக்க தொகை வழங்குவோம் என்று அறிவித்ததை, திமுக ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவிப்பதாக விமர்சித்தார். அத்துடன், ஸ்டாலினின் 7 உறுதிமொழி உட்பட அனைத்தையும் காப்பி அடிப்பதாகவும், மக்கள் நீதி மய்யம் எழுதி வைக்கும் காகிதங்கள் பறந்து சென்று, துண்டு சீட்டாக மாறி வருவதாகவும் கமல் குறைகூறினார்.

    இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியும் நடிகையுமான ஸ்ரீப்ரியாவும் திமுக-வின் இந்த அறிவிப்பை கேலி செய்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.



    அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்...திமுக அறிவிப்பு... இப்படியெல்லாம் காப்பி அடிச்சா பெயில் (fail)ஆயிடுவீங்க பாத்து என்றுள்ளார்.
    Published by:Vijay R
    First published: