• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • நடிகை நமீதா பிரச்சாரத்தின் போது சொந்த கட்சியினரை கலாய்த்த வானதி சீனிவாசன்

நடிகை நமீதா பிரச்சாரத்தின் போது சொந்த கட்சியினரை கலாய்த்த வானதி சீனிவாசன்

நடிகை நமீதா - வானதி ஸ்ரீனிவாசன்

நடிகை நமீதா - வானதி ஸ்ரீனிவாசன்

கோவை தெற்கு தொகுதியில் நமீதா பிரச்சாரத்தின் போது, மெய் மறந்து நிற்காதீங்க..அடுத்து எங்க போகனும்  வழியை காட்டுங்கப்பா" என சொந்த கட்சியினரையே  வானதி சீனிவாசன் கலாய்த்தார்.

  • Share this:
கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகை நமீதா இன்று  பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பா.ஜ.க ஊடக பிரிவினர் சமூக வலைதளத்தில் பதிவிட "வாத்தி கம்மிங்" பாடலுக்கு இளைஞர்கள் நடனமாட, வானதி சீனிவாசனும், நடிகை நமீதாவும் பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி வந்து, அந்த பாடலின் பிரபலமான நடன அசைவை இருவரும் ஆடிக்காட்டினர்.

நடிகை  நமீதா  முழுபாடலுக்கும் நடனமாடுவார் என  கூடி இருந்த அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஓரே ஒரு நடன ஆசைவுடன் நிறுத்தி கொண்டார். இந்நிலையில் பிரச்சாரத்திற்கு உடன் வந்திருந்த அதிமுக முன்னாள் துணை மேயர் லீலாவதி உண்ணி மேளதாளங்களுக்கு ஏற்றபடி பா.ஜ.க மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் குத்தாட்டம் போட்டார்.

இதனைதொடர்ந்து ராம்நகர் பகுதியில் பொது மக்கள் மத்தியில் பேசிய நடிகை நமீதா, 5 ஆண்டுகளாக மோடியின் திட்டங்களை இந்த தொகுதி முழுவதும்  கொண்டு சேர்த்தவர் வானதி சீனிவாசன் என தெரிவித்தார். விழா காலங்களில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உடை எடுத்து கொடுத்து உதவி இருக்கின்றார் என தெரிவித்த அவர், இந்த தொகுதியில் நிற்கும் நம்பிக்கை  இல்லாத ஒருத்தரை நம்பி எப்படி ஓட்டு போடுவது? என கேள்வி எழுப்பினார்.



மேலும் இங்கேயே பிறந்து, வாழ்ந்து வரும் வானதி சீனிவாசனுக்கு  ஓட்டு போடுங்கள் என கேட்டுக் கொண்ட அவர்,வானதி சீனிவாசனை தேர்வு செய்தால் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் வீடு தேடி வரும் எனவும் நடிகை நமீதா பிரச்சாரம்  மேற்கொண்டார்.

இதனை தொடர்த்து பேசிய பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், நீங்கள் நமீதாவிடம் இருந்து ஒரு வார்த்தையை ஆவலாக எதிர்பார்த்து இருப்பீர்கள் என கூறிய அவர், அந்த வார்த்தையை சொல்லுங்கள் என நடிக்க  நமீதாவிடம் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து மீண்டும் மைக்கை வாங்கிய நடிகை நமீதா "மச்சான்ஸ் " தாமரைக்கு ஓட்டு போடுங்க. தமிழ்நாட்டில் தாமரை மலரும் " என கூறி ஓட்டு கேட்டார். இதன் பின்னரும் பிரச்சார வாகனம் அந்த இடத்தில் இருந்து நகராமல் அதே இடத்தில் நின்றது. பின்னர் கட்சியினரை பார்த்து மைக்கில் பேசிய வானதி சீனிவாசன் "மெய் மறந்து நிற்காதீங்க. அ டுத்து எங்க போகனும்  வழியை காட்டுங்கப்பா" என கேட்டுக்கொண்டார்.

அதன் பின்னர் கோவை தெற்கு தொகுதியின் பிற பகுதிகளுக்கு நடிகை நமீதா பிரச்சாரத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: