செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்த நடிகர் அஜித்

செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்த நடிகர் அஜித்

நடிகர் அஜித்

திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் வாக்களிக்க வந்த போது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது அவரது லெ்போனை கோபத்தில் பறித்தார்.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் அஜித் திருவான்மியூர் கார்ப்பரேஷன் பள்ளிக்கு வாக்கு சாவடிக்கு வருகை தந்தார்.  அஜித்தின் காரை பார்த்த அவரது ரசிகர்கள், அவரை சூழ்ந்து கொண்டனர். ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து நுழைவு வாயிலிருந்து அவரை பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றனர்.

  அப்போது ரசிகர்கள் பலர் நடிகர் அஜித்துடன் புகைப்படம் எடுக்க முண்டியத்தனர். ரசிகர் ஒருவர் அஜித்துடன் செல்பி எடுக்க முயன்றார். இதனால் எரிச்சலடைந்த நடிகர் அஜித் அவரின் செல்போனை கோபமாக பறித்தார். பின் தன்னை சுற்றி இருந்த ரசிகர்களை அங்கிருந்து கிளம்புங்கள் என்று சைகையால் சொன்னார். இதை தொடர்ந்து ரசிகர்களிடமிருந்து அஜித்தை பாதுகாப்பாக வாக்கு சாவடிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.  அஜித் வாக்குப்பதிவு செய்வதற்கு 20 நிமிடங்களே முன்னரே வருகை தந்ததால் அவர் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அவரை தொடர்ந்து அஜித் மனைவி ஷாலினியும் தனது வாக்கினை பதிவு செய்தார். அஜித் வாக்களித்த பின் மீண்டும் பாதுகாப்புடன் அவரை போலீசார் அழைத்து சென்றனர்.
  Published by:Vijay R
  First published: